இன்னும் சில நாட்களில் 2022 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் வாழ்வில் இந்த ஆண்டு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே காணலாம்!
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து:
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டு, 18 வருடங்கள் ஆன பின்னர் திடீர் என விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “18 வருடங்கள் நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும் மற்றும் நலம் விரும்பிகளாகவும் ஒன்றாக வாழ்ந்தோம்.
நாங்கள் எங்கள் பாதைகளை தேர்வு செய்து பயணிக்கும் இடத்தில் இருக்கிறோம். எனவே இருவரும் ஒருமனதோடு பிரிய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த விஷயம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.
எனினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவல்களும் வெளியாக வில்லை.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்:
நடிகை நயன்தாரா, இந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,
திருமணம் ஆன 4 மாதத்திலேயே தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக இவர்கள் போட்ட பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்த விசாரணை குழு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை.
இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், முறையான அனுமதியோடு தான் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
லைகர் பட பிரச்சனை:
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் லைகர்.
பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை எடுப்பதற்கு பல அரசியல்வாதிகள் தங்களுடைய கறுப்புப் பணத்தை முதலீடு செய்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் பக்கா ஜூட்சன் என்பவர் அமலாக்க இயக்குநரகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த புகார் தொடர்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் உள்ளிட்ட பலரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை செய்தனர்.
ED உடனான சந்திப்பிற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஊடகங்களிடம் கூறியது, “ED அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்.
அவர்கள் தங்கள் வேலையைச் செய்துள்ளனர். மீண்டும் அவர்கள் என்னை விசாரணைக்கு வர சொல்லவில்லை என தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கடும் சிக்கலில் தனுஷ் படம்: தீர்ப்புக்காக காத்திருக்கும் வியாபாரிகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!