மகனுக்காக இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா

சினிமா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றாக கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரைத்துறையில் பிசியாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த ஒரு பக்கம் தயாரிப்பு, சமூக ஊடகங்கள், ஆன்மிகம், லைஃப் ஸ்டைல் என்று பிசியாக இருந்து வருகிறார்.

என்னதான் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும் தங்களது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவை இருவரும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு வருகின்றனர்.

இன்று (ஆகஸ்ட் 22) தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா அவர் படிக்கும் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி இன்று யாத்ரா படிக்கும் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பெற்றோர்கள் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர்.

dhanush aishwarya elder son

நிகழ்ச்சியின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் பெற்றோர்களாக தங்களது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்று பாராட்டி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற நிகழ்ச்சி பற்றி பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.

மோனிஷா

திருமண நாளில் மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *