தனுஷ் நடித்துள்ள ’நானே வருவேன்’ படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் இதுவரை 27 லட்சம் பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இதில் வரும் தனுஷின் கதாபாத்திரம் ‘காதல் கொண்டேன்’ படத்தில் வரும் சைக்கோ வினோத்தை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கலைப்புலி எஸ்.தாணு வி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் நானே வருவேன். புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த வீராசூரா!
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த மாதம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதே வெற்றி உற்சாகத்தில் அடுத்ததாக தனுஷின் ‘நானே வருவேன்’ படம் செப்டம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்திருந்தது. யுவன்சங்கர் ராஜா இசையில் வெளியான ‘வீரா சூரா’ என்ற அந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
டிரெண்டிங்கில் முதலிடம்!
இந்நிலையில் நேற்று மாலை வெளியான நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் த்ரில்லர் பார்முலாவில் பார்வையாளர்களை மிரட்டுகிறது.
சுமார் 01.41 நிமிடங்கள் ஓடக்கூடிய டீசரில் கொடிக்கு பிறகு இருவேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் வில்லத்தனம், பயம் என இரண்டையும் வெளிப்படுத்தி டீசரில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
அதிலும் வெறிகொண்டு காட்டில் உலாவும் தனுஷ் ’காதல்கொண்டேன்’ சைக்கோ கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது.

டீசர் வெளியான 12 மணி நேரத்தில் இதுவரை யூடியுபில் 27 லட்சம் பார்வைகளை பெற்றுள்ள நிலையில், டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
தமிழ் நடிகர்களில் 11 மில்லியன் பலோயர்களை கொண்டுள்ள ஒரே தமிழ் நடிகர் தனுஷ். அதனால் இவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ட்ரெண்டாகி விடுகிறது.
வெந்து தணிந்தது காடு – வெறுப்பேற்றும் தனுஷ்!
தனுஷின் தொழில்முறை போட்டியாளரான சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியான நிலையில், நானே வருவேன் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் வெந்து தணிந்தது காடு பற்றிய செய்திகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
நானே வருவேன் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இராமானுஜம்
வெந்து தணிந்தது காடு விமர்சனம்!