தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இந்தி மொழியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.
சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’அத்ராங்கி ரெ’ என்ற திரைப்படத்தின் மூலம் சாரா அலிகானுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில், இன்று(ஜூன் 21) நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க விருக்கும் இந்தி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் தனுஷ், ராஞ்சனா படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராயுடன் சேர்ந்து புதிதாக ஒரு படத்தில் இணைகிறார்.
இந்த படத்திற்கு ’தேரே இஷ்கு மெயின்’ (Tere Ishq Mein ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராஞ்சனா படத்திற்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பினை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது தனுஷின் இந்த புதிய அறிவிப்பை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ராஞ்சனா திரைப்படம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2013 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாஸ்மாக் மூடுவிழா: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கடைகள்?
மணிக் கணக்கில் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!