ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் 51!

Published On:

| By christopher

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் தனுஷ் 50 படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் 50 படத்திற்கு பின் தனுஷ் 51 படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்மூலா இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்க உள்ளனர்.

தனுஷ் 51 அரசியல் மாஃபியா கதைக்களத்தில் உருவாக உள்ளது. வரும் ஜனவரி மாதம் மும்பையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படப்பிடிப்பின் போதே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தனுஷ் 50 மற்றும் தனுஷ் 51 பட அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

மிக்ஜாம்: நான்கு மாவட்டங்களில் 4,106 நபர்களுக்கு சுவாச தொற்று!

“அனிமல் படம் ஒரு நோய்”: கடுமையாக சாடிய காங்கிரஸ் எம்.பி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel