devi sri prasad reunite with dhanush

13 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் இணையும் ராக் ஸ்டார்!

சினிமா

தனுஷின் 51 வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். D51 படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

D51 படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

பொலிட்டிக்கல் மாஃபியா கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் 51 வது படம் அப்டேட் வெளியானது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த D51 படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று (ஜனவரி 20) ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால், D51 படத்திற்கு ராக் ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி, வேங்கை ஆகிய படங்களுக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷ் – தேவி ஶ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் D51 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

7 முறை சம்மன்… ஆஜராகாத முதல்வர்: வீட்டிற்கே சென்ற அமலாக்கத்துறை!

ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ… முக்கிய குற்றவாளி கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *