இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து கடந்த செப்.27ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தேவரா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த பான் இந்தியத் திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்கான வரவேற்பு எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இருப்பினும் என்.டி.ஆர் ரசிகர்களால் இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட்டது. மேலும், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகான், ஜான்வி கபூர், ஷைன் டாம் சாக்கோ, பிரகாஷ் ராஜ் , கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தின் இந்தி வெர்ஷன் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….