கடந்த 2013 ஆம் ஆண்டு, எழில் இயக்கத்தில் விமல் நடித்த தேசிங்கு ராஜா படம் வெற்றிப் படமாக அமைந்தது. இன்றும் அந்த படத்திற்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது இயக்குனர் எழில் தேசிங்கு ராஜா 2 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்திலும் விமல் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகைகள் பூஜிதா பொன்னாடா மற்றும் ஹர்ஷிதா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் வித்யாசாகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாகக் கொண்ட காமெடி படமாக தேசிங்கு ராஜா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் கோடை விடுமுறைக்கு தேசிங்கு ராஜா 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லையில் 2வது முறையாக மத்திய குழு ஆய்வு!
இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை!