desingu periyasamy gives big update on STR48

ரஜினியின் மாஸ்… ஓகே சொன்ன சிம்பு: தேசிங்கு பெரியசாமி பிக் அப்டேட்!

சினிமா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

இந்த படத்தை பார்த்த பின் நடிகர்கள் ரஜினி, சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் தேசிங்கு பெரியசாமிக்கு தொலைபேசி வாயிலாக தங்களது பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

அதன்பின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி நடிகர் ரஜினியின் படத்தை இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணத்தினால் அந்த ப்ராஜெக்ட் நடக்கவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. STR 48 படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு நேர்காணலில் பேசிய போது, “இந்த படத்தின் கதையை முதலில் நடிகர் ரஜினிக்கு தான் சொன்னேன். ஆனால் ஒரு சில காரணத்தினால் அந்த படம் நடக்கவில்லை. அதன் பிறகு ரஜினியின் அந்த மாஸ் மேனரிசத்தை ஈடுசெய்வதற்கு பொருத்தமான ஹீரோவாக STR இருந்தார், அவரிடம் கதை சொன்னேன். STR கதை கேட்டவுடனே ஓகே சொல்லிவிட்டார்.

அதன்பிறகு கமல் சாரும் கதைக்கு ஓகே சொன்னதும் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டோம். இந்த படம் நடிகர் சிலம்பரசனின் நடனம், மாஸ், ஆக்சன் என அனைத்து விதமான திறமைகளையும் வெளிக்காட்டக்கூடிய ஒரு படமாக அமையும்.

STR 48 படத்தின் பல காட்சிகளுக்கான ஷூட்டிங் செட்டுக்குள் தான் நடக்கப் போகிறது. இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாவதால் இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. STR 48 ஒரு தர லோக்கல் Period Film” என்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

ICC WorldCup: அரையிறுதிக்கு செல்லப்போகும் கடைசி அணி எது?

சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *