தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர், டெல்லி கணேஷ். இவர், தனது 80வது வயதில் உயிரிழந்திருக்கிறார். 1980 முதல் இப்போது வரை பல ஹீரோக்களின் படங்களில் பிரபல நட்சத்திரமாக வலம் வந்த இவர், உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர் 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இதையடுத்து, டெல்லி கணேஷின் இளமைக்கால போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்கிடையே டெல்லி கணேஷ் மரணம் பற்றி முன்னர் ஒரு பேட்டியில் சொன்ன பதில் இப்போது வைரலாகி வருகிறது.
அதில், அவர் கூறியிருப்பதாவது, ”ஒரு சில சீரியல் டைரக்டருங்க என்னை பிடிக்காத டைரக்டருங்க நான் சாகுற மாதிரியே சீன் வைப்பாங்க. ஒரு மாதிரி ’ஆஆ…’னு மியூசிக் போட்டு அதையே திரும்ப திரும்ப காட்டுவாங்க. ஆனால், அந்த மாதிரி காட்சில நான் நடிக்க மாட்டேன். வேற யாரையாவது படுக்க வச்சு மாலை போட்டுக்கோனு சொல்லிடுவேன். நீ கொடுக்குற காசுக்கு இப்படியெல்லாம் வேற நான் நடிக்கனுமானு சொல்லிடுவேன்.
அப்போது காசு நிறைய கொடுத்தா நடிப்பீங்களா?னு கேட்பானுங்க. அப்படியும் நான் நடிக்க மாட்டேனு சொல்லிடுவேன். மரணம்னா யாருக்குதான் பயம் இருக்காது. ’ஹிஹி நான் இன்னும் 15 நாள்ள செத்து போயிடுவேன்’னு யாராவது இளிச்சுக்கிட்டே சொல்லுவாங்களா? என்று அந்த பேட்டியில் டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.
டெல்லி கணேஷ், 1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு சினிமா மீதிருந்த தீராத காதலால் திரையுலகிற்குள் நுழைந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாரத்தின் முதல் நாளே வீழ்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் குஷி!