மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் இந்திய விமானப் படை சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையுடன் இன்று(நவம்பர் 11) காலை தகனம் செய்யப்பட்டது.
இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு நாடகங்களில் நடித்து வந்தார்.
நானூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 9ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் அவரது ராமாபுரத்து இல்லத்தில் காலமானார். அவரது இறப்பிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அவரது இல்லத்திற்கு வந்த இந்திய விமானப் படை வீரர்கள், அவரது உடலின் மீது விமானப் படையின் கொடியை போர்த்தி மற்றும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக நெசப்பாக்கம் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் மீது போர்த்தியிருந்த கொடி மடித்து அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் இன்று காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தாக்குதல் நடத்திய அமமுகவினர்… ஆர்.பி. உதயகுமார் புகார்!
டெல்லி கணேஷின் உதவும் உள்ளம்… யூடியூப்பரின் உருக்கமான பேஸ்புக் பதிவு!