time magazine deepika padukone

ஆஸ்கர் விருது குறித்து ’டைம்’ இதழில் தீபிகா

சினிமா

‘டைம்’ வார இதழ் 1923 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ். இதில் தங்களை பற்றிய செய்திகள், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவருவதை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலகினர் கௌரவமாக கருதுகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை திரைப்படத்துறையில் இருந்து நடிகர் ஆமீர்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோர் அட்டை படத்தில் இடம் பிடித்தனர்.

தற்போது இவர்கள் வரிசையில் இந்திய நடிகை நடிகை தீபிகா படுகோனே இடம் பிடித்திருக்கிறார்.

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பதான்’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியின் மூலம் மீண்டெழுந்தார் தீபிகா.

Deepika Padukone on Time magazine cover with Interview

அந்தப் படத்தில் ஆக்க்ஷன் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தீபிகா படுகோனே சர்வதேச அளவில் பிரபலமானார். இந்த வருடம் நடந்து முடிந்த ஆஸ்கர் அகாடமி விருது விழாவின் தொகுப்பாளராக கௌரவிக்கப்பட்டார்.

2018ம் ஆண்டு டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் என பட்டியலிடப்பட்ட 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே இடம் பெற்றிருந்தார்.

இது போன்று பல்வேறு நிகழ்வுகள் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தீபிகா படுகோன் டைம் பத்திரிகையின் அட்டை படத்தில் இடம்பெற்று மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று இந்திய திரையுலகிற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்.

Deepika Padukone on Time magazine cover with Interview

டைம் இதழில் அவரது பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, “உலகில் மனித சக்தியை அதிகமாக கொண்ட நாட்டின் பிரதிநிதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னை சுற்றியும், எனக்கு எதிராகவும் நிறைய அரசியல் நிகழ்வுகள் இருந்தது. அதைப் பற்றி பேச வேண்டுமா என்று தெரியவில்லை.

பத்மாவத் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு நான் எதிர்பாராதது. அது ஏன் என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை.

ஒரு பாடலும், ஒரு ஆவணப்படமும் ஆஸ்கர் விருது வென்றது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவற்றை ஒரு தொடக்கமாக பார்க்கிறேன்.

வருங்காலத்தில் இந்திய படங்கள் ஆஸ்கர் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

கர்நாடகா தேர்தல்: 9 மணி முன்னிலை விவரம்!

என்னை எந்த கட்சியும் தொடர்பு கொள்ளவில்லை : குமாரசாமி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *