பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதிக்கு இன்று (செப்டம்பர் 8) பெண் குழந்தை பிறந்துள்ளது.
பாலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திர ஜோடிகளாக தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஆகியோர் உள்ளனர். இருவரும் கடந்த 2018 இல் இத்தாலியின் லேக் கோமோவில் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தீபிகா அறிவித்தார்.
இதனால் செல்லும் இடமெல்லாம் இருவரிடமும் ’உங்களுக்கு என்ன குழந்தை வேண்டும்?’ என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
ஒருகட்டத்தில் இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “கோவிலில் எனக்கு லட்டு தான் வேண்டும், கேசரி தான் வேண்டும் என யாரும் கேட்பதில்லை. என்ன தருகிறார்களோ, அதை பிரசாதமாக வாங்கி கொள்கிறோம். அது தான் குழந்தை விஷயத்திலும்.. எங்களுக்கு குழந்தையின் பாலின விஷயம் குறித்து கவலையில்லை” என்று நடிகர் ரன்வீர் பதில் அளித்திருந்தார்.
இதற்கிடையே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை கடந்த வாரம் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் தீபிகா. தொடர்ந்து நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று தம்பதியர் இருவரும் வழிபட்டனர்.
இந்த நிலையில் தீப்வீர் ஜோடிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பலரும் நட்சத்திர ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
42 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – கமல்
AUS vs SCO: ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய கேமரூன் கிரீன்