2022 இறுதியில் அதிரடி காட்டும் நாயகிகள்

சினிமா

இந்த ஆண்டு இறுதியில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் வெளியாக உள்ளன.

ராங்கி

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் போன்ற படங்களை இயக்கிய எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் ராங்கி படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதிய இப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும் ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருப்பதாலும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிரைவர் ஜமுனா

வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி உள்ள படம் டிரைவர் ஜமுனா.

படம் வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து இருந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

செம்பி

மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடித்துள்ள படம் செம்பி.

இப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. எப்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் கோவை சரளா, இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஓ மை கோஸ்ட்

சிந்தனை செய் பட இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், ஓ மை கோஸ்ட். சன்னி லியோன், யோகி பாபு, சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், டிக் டாக் பிரபலம் ஜி.பி. முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஹாரர், ஆக்‌ஷன், காமெடி கலந்த படமாக ஓ மை கோஸ்ட் உருவாகியிருக்கிறது.

மேற்கண்ட ராங்கி, டிரைவர் ஜமுனா, ஓ மை கோஸ்ட், செம்பி ஆகிய படங்கள் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படங்கள். சினிமா ரசிகர்கள் பலரும், 2022 இறுதியில் நாயகிகள் அதிரடி காட்டவுள்ளனர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த 4 படங்கள் மட்டுமல்லாது அருவா சண்டை, கடைசி காதல் கதை, காலேஜ் ரோடு ஆகிய படங்களும் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மோனிஷா

கரும்பு வழங்க ஆணை: உளவுத்துறை சொன்ன சீக்ரெட்!

குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *