புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் விடுதலை 2!
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் விடுதலை. பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக கொண்டு உருவான விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இரண்டாம் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரை பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையாக காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் விடுதலை 2 ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தான் விடுதலை 2 வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை!
‘பிரேமம்’ இயக்குநருக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்: உதவிய பார்த்திபன்