பிக்பாஸ் வீட்டில் பிரிக்க முடியாதது எது? என கேட்டால் விஷ்ணு-அர்ச்சனா சண்டை என கூறலாம். அந்தளவுக்கு இருவரும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். 59-வது நாளான நேற்று (நவம்பர் 29) என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். fight Vishnu Archana biggboss
ஆரம்பத்தில் இருந்தே வீட்டிற்குள் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்யாத விஷ்ணு இத்தனை வாரங்கள் கடந்து தற்போது அர்ச்சனாவிடம் மட்டும் எகிறுவது சகிக்கவில்லை. உண்மையில் அந்தளவுக்கு அவரின் உடல்மொழியும், வார்த்தைகளும் இருக்கின்றன.
வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா முதலில் அழுதாலும் கூட, தற்போது இந்த ஆட்டத்தை திறமையாக ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்.வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டாலும் கூட அவர்கள் மத்தியில் தனித்து நிற்கக்கூடிய வலிமையும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் நமக்கு ஈசியான டார்கெட் என்பது போல அர்ச்சனாவிடம் மட்டும் விஷ்ணு எதிர்த்து சண்டை போடுவது முடிவில் அவருக்கே எதிராக மாறலாம். ஏன் என்றால் பொதுவாக பெண்கள் என்றால் ஒரு சாப்ட் கார்னர் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதோடு விஷ்ணு பேசும் அளவுக்கு அர்ச்சனாவும் இந்த ஆட்டத்தை மோசமாக ஆடவில்லை.
எனவே நாமினேஷனில் விஷ்ணு பெயர் வந்தால் அது அவருக்கே மிகுந்த பின்னடைவாக மாறிவிடும். இதை அவர் என்று உணரப்போகிறார் என்பது தெரியவில்லை. பூர்ணிமா, அனன்யா என மற்ற பெண்களிடம் வழிந்து பேசும் விஷ்ணுவுக்கு அர்ச்சனா என்றாலே பாவற்காய் போல இருக்கிறது.
இதை நேற்று (நவம்பர் 29) நடைபெற்ற இரண்டு சண்டைகளுமே நிரூபித்தன. முதலில் உங்களுக்கு ஒரு சூப்பர் பவர் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று பிக்பாஸ் ஆரம்பித்து வைக்க, மாயா ‘நான்கு பேர் தான் இந்த ஆட்டத்தை சிறப்பாக விளையாடுகின்றனர். மற்றவர்களை நன்றாக விளையாட செய்வேன்’ என்று கூறினார்.
அடுத்து வந்த விஷ்ணு, ‘பொளீர் பொளீர் என்று அடிச்சு ஆடுவேன்’ என்று வார்த்தைகளை விட்டார். இது அர்ச்சனாவுக்கு எதிராக சொன்னது என பார்க்கும் நமக்கே தெரியும் போது அர்ச்சனாவுக்கு தெரிந்திருக்காதா என்ன? அதுதொடர்பாக அர்ச்சனா-விஷ்ணு இருவருக்கும் முட்டிக்கொண்டது .
ஆனால் சக போட்டியாளர்கள் யாரும் இவர்கள் சண்டையை சமாதானம் செய்ய முன்வரவில்லை. சொல்ல வந்த விஷயத்தை கண்ணியமாக சொல்லாமல் மோசமான உடல்மொழி, வார்த்தைகளுடன் சொல்லி அதற்கு தன்னைத்தானே தட்டி கொடுத்து கொண்டார் விஷ்ணு.
விஷ்ணு இப்படி பேசுவதை பூர்ணிமா பின்னர் தனிமையில் கண்டித்தார். என்றாலும் சண்டை தான் முக்கியம் என்பது போல தான் அவரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.பிக்பாஸ் ராஜாங்க டாஸ்க் உத்தரவு கொடுக்க, ஹரீஷ் கல்யாண் கொடுத்த ஸ்டாரை விஷ்ணுவுக்கு கொடுப்பதாக ஸ்மால் பாஸ் வீட்டினர் முடிவு செய்தனர்.
இதைப்பார்த்த அர்ச்சனா இதுக்கு எதுக்கு மீட்டிங் போட்டு பேசினீங்க என்று கேட்க? அதற்கென காத்திருந்தது போல விஷ்ணு ஓடிவந்து அர்ச்சனாவிடம் சண்டை போட ஆரம்பித்தார்.சண்டைக்கு நடுவில் குப்பை, குப்பைத்தொட்டி என இருவரும் மாறி,மாறி திட்டிக்கொண்டனர்.
இப்படியே போனால் விஷ்ணு விரைவில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக ஆனாலும் ஆச்சரியமில்லை. இதுபோன்ற பேர்வழிகளை தான் பிக்பாஸ்க்கும் பிடிக்கும் டைட்டில் சூட்டி அழகு பார்ப்பார். ராஜா டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள நிக்ஸன் மன்னராக தேர்வு செய்யப்பட்டர்.
சர்வாதிகார மன்னரான அவருக்கு ராஜமாதா விசித்ரா கிரீடம் சூட்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். என்றாலும் ஒரு சர்வாதிகாரி போல அவர் நடந்து கொள்ளவில்லை. அதிகபட்சமாக விக்ரம், ரவீனா, ஜோவிகாவிற்கு தண்டனைகள் கிடைத்தன. விரைவில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததாக பிக்பாஸ் அறிவித்தார்.
கேப்டனாக படாதபாடு படுவதால் அவரால் இந்த டாஸ்கில் பெரிதாக பெர்பாமன்ஸ் செய்ய முடியவில்லை போல. வரும் நாட்களில் இந்த ராஜா டாஸ்க் எப்படி போகிறது? யார் நன்றாக செய்கிறார்கள்? என்பதை வழக்கம்போல நாம் காத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் வடிந்துவிடும்: ராதாகிருஷ்ணன்
fight Vishnu Archana biggboss