தெலுங்கு நாயகன் நானி நடித்து வரும் ‘தசரா’ திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ‘தீக்காரி’ பாடல் வெளியானது.
லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ‘தசரா.’ பன்மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், நேற்று படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தீக்காரி’ வெளியாகியுள்ளது.
‘தசரா’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ பாடல் ஒரு மென் சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக் கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது.
ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார்.
இராமானுஜம்
ராமர் பால வழக்கு: அரசியல் சாசன அமர்வில் விசாரணை!
பணம் கேட்டது உண்மை தான் ஆனால்..ஆடியோ குறித்து விளக்கம் தந்த கே.பி.முனுசாமி