நடிகர் தனுஷ் தனது 50 வது படமான “ராயன்” திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடங்காத அசுரன் மற்றும் செகண்ட் சிங்கிள் வாட்டர் பாக்கெட் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வரும் ஜூன் 13ஆம் தேதி ராயன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூன் 13 ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று கூறப்படுகிறது.
ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதற்கு இரண்டு நாள் முன்பாக ஜூலை 26 தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஆனால் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!
திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!
ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும்?