கேப்டன் மில்லர் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள தனுஷின் 50 வது படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் மொட்டை கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த படத்தில் தனுஷ் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தின் போஸ்டர்களை கண்ட ரசிகர்கள் வட சென்னை படத்தின் சாயல் இதில் தெரிகிறது என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 6) ராயன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
நிறைய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதை சுற்றி தீ கொழுந்து விட்டு எறிய, அந்த கல்லின் மேல் தனுஷ் மாஸாக அமர்ந்திருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ராயன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி அறிவிக்காமலேயே இருந்த ராயன் படக் குழுவினர், இந்தியன் 2 படம் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் தள்ளிப் போவதால் இந்த ஜூன் மாதத்தில் ராயன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சொந்தக்காரங்க தொல்ல தாங்க முடியல” : அப்டேட் குமாரு
சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! காரணம் என்ன?