டேனியல் பாலாஜி… கதறிய தாயார் – கலங்க வைக்கும் காட்சி!

நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் தகனம் எப்போது என்பது குறித்த தகவல்கள், தற்போது வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் என புகழப்பட்ட நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு (மார்ச் 29) மாரடைப்பால் காலமானார்.

தற்போது பாலாஜியின் உடல் புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது வீட்டில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறந்த பிறகு கண்கள் தானமாக அளிக்கப்பட வேண்டும் என்ற பாலாஜியின் விருப்பப்படி, அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் டேனியல் பாலாஜியின் உடல் தகனம் குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில், புரசைவாக்கத்தில் உள்ள டேனியல் பாலாஜி இல்லத்திற்கு வந்த அவரது தாய் சடலமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த தனது மகனை பார்த்து கதறி அழுதார்.  அவரின் கதறல் அங்கிருக்கும் அனைவரையும் உருக வைப்பதாக இருந்தது.

தொடர்ந்து டேனியல் பாலாஜி இல்லத்திற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாலாஜியின் நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இதனால் #RIPDanielBalaji என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOLD RATE: சட்டென குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு பாருங்க!

தாய்மொழி தமிழ்… மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: ஸ்டாலின் காட்டம்!

இறந்தும் டேனியல் பாலாஜி செய்த நல்ல விஷயம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts