டான்சர் ரமேஷ் மரணத்தில் மர்மம் : முதல் மனைவி பரபரப்பு புகார்!

சினிமா

டான்சர் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது முதல் மனைவி, இரண்டாவது மனைவி மீது புகார் அளித்துள்ளார்.

டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது தனியார் தொலைக்காட்சியில் பிரபல நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் ரமேஷ்.

dancer ramesh suicide first wife filed compliant on second wife

இவர் தனது பிறந்தநாளான நேற்று (ஜனவரி 27) புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், டான்சர் ரமேஷ் தன்னுடைய பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு மது பார்ட்டி வைக்க இரண்டாவது மனைவியான இன்பவல்லியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

ஆனால், இன்பவல்லி பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குடியிருப்பு பகுதியின் 10வது மாடியில் இருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது.

இந்நிலையில், டான்சர் ரமேஷின் மரணம் குறித்து கேள்விபட்ட முதல் மனைவி சித்ரா, “தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது” என பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முதல் மனைவி சித்ரா மட்டுமின்றி, அவரது உறவினர்களும், “ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் மாடியில் இருந்து தள்ளி விட்டார்களா? என்று தெரியவில்லை. ரமேஷ் மாடியில் இருந்து விழுந்தவுடன் அவரது 2வது மனைவி மற்றும் மகள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்” என்று அவர்களது சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் மனைவியான சித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரமேஷிற்கு இரண்டு மகள்கள். அதில் முதல் மகளின் திருமணத்தன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இன்பவல்லியை திருமணம் செய்து கொண்டார். இன்பவல்லிக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரமேஷ் பிரபலமாகி வந்த நேரத்தில் அவரது முதல் மனைவி மற்றும் 2வது மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ரமேஷை கடத்தி சென்று விட்டதாக முதல் மனைவி மீது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே முதல் மனைவி மற்றும் 2வது மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சமாதானம் ஏற்படவே, இரண்டு மனைவிகளின் வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்துள்ளார் ரமேஷ்.

இந்த நிலையில் தான் 2வது மனைவி இன்பவல்லி வசிக்கும் குடியிருப்பு பகுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் டான்சர் ரமேஷ்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோனிஷா

டிஜிட்டல் திண்ணை: அலேக் எடப்பாடி… அலர்ட் பன்னீர்: ஈரோடு கிழக்கு பணிக்குழு பின்னணி!

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *