திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் 1969 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதினை நடிகர்கள் அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார், சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித்ரே கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர்.
இந்தி திரையுலகில் விரும்பப்பட்ட நடிகைகளில் வஹீதா ரஹ்மானும் ஒருவர்.
பரதநாட்டிய கலையை முறைப்படி கற்ற நிலையில், சிறு வயதில் மருத்துவராக விரும்பினார். ஆனால் தந்தையின் மறைவு அவரை சினிமாவில் நடிப்பதற்காக அழைத்து வந்தது.
குடும்ப பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு 1955 ஆம் ஆண்டு ரோஜுலு மராயி என்ற தெலுங்கு படத்தில் எருவக சாகலோய் என்ற பாடலில் தான் வஹீதா ரஹ்மான் அறிமுகமானார்
பின் 1956 ஆம் ஆண்டு ராஜ் கோஸ்லா இயக்கிய சிஐடி படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரீ கொடுத்த வஹீதா ரஹ்மான் ககாஸ் கே பூல், சாஹிப் பிவி அவுர் குலாம், கைடு, காலா பஜார்,
ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ராம் அவுர் ஷியாம், ஆத்மி, தீஸ்ரீ கசம் மற்றும் காமோஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழில் 1955 ஆம் ஆண்டு வெளியான காலம் மாறிப்போச்சு படத்தில் குரூப் டான்ஸராகவும்,
1956 ஆம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.
வஹீதா ரஹ்மான் 60க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.
கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பெங்களூரிலுள்ள பண்ணை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
இவருக்கு ஷோஹைல், கஷ்வி ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததை அடுத்து, மும்பை பந்த்ராவிலுள்ள தனது கடற்கரை பங்களாவில் தற்போது வசித்து வருகிறார்
.85 வயதான இவர் ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பிலிம்பேர்விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
ராணுவ வீரரை கைது செய்த கேரள போலீசார்: பின்னணி என்ன?
தங்கத்தை குறி வைக்கும் ஷூட்டர்: யார் இந்த ரமிதா ஜிண்டால்?