இந்தி நடிகைக்கு தாதா சாகேப் விருது!

சினிமா

திரைத் துறையில் தன்னிகரற்ற சாதனை செய்பவருக்கு மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே விருது -2019 கடந்த முறை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது திரையுலகினருக்கு கிடைக்கும் கெளரவமாகவும் , வாழ்நாள் அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் , 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை பிருத்விராஜ் கபூர், நாகி ரெட்டி, எல்.வி.பிரசாத்,ராஜ் கபூர், அமிதாப்பச்சன், அசோக் குமார், ராஜ்குமார், திலீப் குமார்,

சிவாஜி கணேசன்,வினோத் கண்ணா, இயக்குநர்கள் கே.பாலசந்தர், அடூர் கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ரே, கே.விஸ்வநாத், பாடகிகள் ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர்.

dada saheb phalke award to be given asha parekh

பாலிவுட்டில் 1960, 1970 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த ஆஷா பரேக்.

குஜராத்தில் 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த ஆஷா பரேக் 10 வது வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது நடன திறமையால் பிரபல திரைப்பட இயக்குனர் பிமல் ராயின் கவனத்தை ஈர்த்தார்.

dada saheb phalke award to be given asha parekh

இதனால் இயக்குனர் பிமல் ராய் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் படிப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

அதன்பின்னர் 1959 ஆம் ஆண்டு இயக்குனர் நசீர் ஹுசைனின் படமான தில் தேகே தேக்கோ படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

dada saheb phalke award to be given asha parekh

மேலும் இந்தியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஆஷா பரேக் அமிதாப்பச்சனுடன் காலியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஜோதி என்ற பெயரில் குஜராத்தி மொழியில் 1980 ஆம் ஆண்டு வெளியான சீரியல் மூலம் இயக்குனராகவும் பரிணமித்தார்.

அக்ருதி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல சீரியல்களை தயாரித்தார்.

1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை சினி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் தலைவராக இருந்த ஆஷா பரேக் மத்திய அரசின் தணிக்கை வாரியத்தின் முதல் பெண் தலைவராவார்.

தியோஹார் தமாகா என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்த அவர், 2002 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார். 79 வயதான ஆஷா பரேக் திருமணமே செய்து கொள்ளவில்லை.

பேட்டி ஒன்றில் நான் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற விரும்பினேன். ஆனால் தனக்கு கிடைத்த புகழும், நற்பெயரும் அதனை தடுத்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

dada saheb phalke award to be given asha parekh

இயக்குநர் நசீர் ஹூசைனுடன் காதல் வதந்தியில் சிக்கினார். இப்படியான ஆஷா பரேக்கின் வாழ்க்கை வரலாறு தி ஹிட் கேர்ள் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் தான் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பொன்னியின் செல்வன்: ஜோராக விற்பனையான டிக்கெட்!

ட்வின்ஸாக நடித்த ஜீவா டிடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *