இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தனுஷின் 55ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.
சமீபத்தில் கொடுத்த பேட்டியில், ‘என்னுடைய அடுத்த படத்தில் ஒரு அசாதாரண திறமை கொண்ட நடிகர் இருப்பார்’ என ஹிண்ட் கொடுத்திருந்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதைத் தொடர்ந்து இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று(நவ.8) அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தனுஷின் 55ஆவது படமான இந்தப் படத்தை ‘கோபுரம் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார். படத்தின் பூஜை இன்று(நவ.8) நடைபெற்று அதுகுறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் படக்குழுவால் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் கௌதம் கார்த்திக் நடிப்பில் 2017ஆம் ஆண்டில் வெளியான ‘ரங்கூன்’ அதற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அமரன்’ இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இணைந்துள்ள ராஜ்குமார் பெரியசாமியின் சம்பளமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்குதே… கேப்டனுடன் சண்டை போட்ட அல்சாரி ஜோசப்
சிவராஜ்குமாருக்கு மருத்துவ சிகிச்சை! : காரணம் என்ன?