டி.பி.கஜேந்திரன் மறைவு: நண்பருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர்

சினிமா

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் மூத்த இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (பிப்ரவரி 5) காலமானார். அவரது மறைவு சினிமா துறையில் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், டி.பி.கஜேந்திரனின் நண்பரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அந்த இரங்கல் செய்தியில், “பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.

தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

இரட்டை இலை:  ஸ்டாலின் வெளிப்படுத்திய விருப்பம்!

“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.