வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதலீலை. இந்த படத்திற்கு பிறகு அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ‘கஸ்டடி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
அண்மையில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இன்று மார்ச் 16 இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
எப்படி இருக்கு ‘கஸ்டடி’ பட டீசர்?
‘காயம்பட்ட மனசு ஒருத்தன எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் கொண்டுபோகும்’ என பின்னணி குரல் ஒலிக்க தொடங்கும் டீசர் ‘கதையை கணித்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் கட் செய்யப்பட்டுள்ள டீசரில் அரவிந்த் சாமியின் மாஸ் மூவ்மெண்ட்ஸ் இருக்கிறது.
‘எ வெங்கட் பிரபு ஹண்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ள டீசரில் நாக சைதன்யாதான் முழுமைக்கும் நிறைந்திருக்கிறார். படம் வரும் மே மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”நாட்டிற்கு எதிராக நான் பேசவில்லை”: ராகுல் காந்தி