கோபி – சுதாகரின் ‘க்ரவுட் ஃபண்டிங்’ திரைப்படம் கைவிடப்பட்டதா?

சினிமா

கோபி மற்றும் சுதாகர் கூட்டணியில் க்ரவுட் ஃபண்டிங் மூலம் உருவாகி வந்த திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிகழ்கால சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து தங்களது பரிதாபங்கள் சேனலின் மூலம் பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

சமீபத்தில் கோபி, சுதாகரின் நடிப்பில் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் குறித்த வீடியோ நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பாராட்டும் அளவுக்கு டிரெண்டிங்கில் கலக்கியது.

இதற்கிடையே தற்போது கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்க உள்ள இந்த படத்தின் பூஜைவிழாவில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதனை தொடர்து மேடையில் பேசிய சுதாகர், ”இந்த நாளுக்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். இது எப்போது நடக்கும் என்ற போராட்டத்தில் இருந்தோம்.

தற்போது இந்தப் படம் மிகவும் நல்ல கதையாக அமைந்துள்ளது. முழுநீள காமெடி படமாக இல்லாமல் சென்டிமென்ட் கொண்ட படமாகவும் இருக்கும். விஷ்ணு விஜயன் கதையைக் கேட்டுவிட்டு, கோபிக்கு கால் செய்து, ‘படம் நல்லாயிருக்குடா பண்லாம்டா’ என கூறினேன். அப்படித்தான் இது நிகழ்ந்தது.” என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய கோபியிடம், கொரோனா காலத்தில் க்ரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்ட படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “எங்களது முதல் ப்ராஜெக்ட் கடந்த 2019ம் ஆண்டு க்ரவுட் ஃபண்டிங் மூலம் பண்ணலாம் என நினைத்து ஆரம்பித்தோம்.

கொரோனா ஊரடங்கால் படத்தின் பட்ஜெட் எங்களின் கைமீறி சென்றதால் அந்த ப்ராஜெக்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இரண்டாவது படத்தை ஆரம்பித்திருக்கின்றோம். க்ரவுட் ஃபண்டிங் செய்த மக்களுக்காக இதை தொடங்கியுள்ளோம். இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்த மக்களுக்கு நாங்கள் கொடுக்கும் கைமாறு இந்தப் படம்.

இந்தப்படம் முழுக்க நாங்கள் உழைத்த பணத்தைக் கொண்டு உருவாக்கும் படம். அதேசமயம் க்ரவுட் ஃபண்டிங் செய்த மக்களுக்கு படத்தை சமர்ப்பிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

கோபி மற்றும் சுதாகர் தங்களது முதல் படத்திற்கு ஃபண்ட்மெலன் செயலி மூலம் ரூ.6.5 கோடி நிதி திரட்டினர்.

அதனை தொடர்ந்து ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் அவர்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

உலகின் அனைத்து பிரச்சனைகளும் எப்போது தீரும்? – நீதிபதியின் தீர்ப்பால் சலசலப்பு

நள்ளிரவில், முதல்வரின் பெண் செயலாளர் படுக்கை அறைவரை சென்ற அதிகாரி!

+1
1
+1
1
+1
1
+1
1
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published.