பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது பாண்டிச்சேரியில் உள்ள ரேடியர் மில் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு ரஜினியை காண ஆவலோடு குவிந்தனர். அந்த வகையில் நேற்று(ஜூன் 3) ரஜினி ஷூட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் உதயகுமார் என்பவர் , ”அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான்…அது ரஜினி தான்” என்று கூறியுள்ளார்.
சுரேஷ் என்ற நபர், “ இவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பிற்கு அளவு இல்லை” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இணையத்தை கலக்கும் பிரியங்கா சோப்ரா நடனம்!
ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!