கூலி படத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் தோற்றப் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குநர்களுடன் இணைந்து படம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஜெய்லர் திரைப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினி நடித்திருந்தார்.
தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.
Thalaivar Look in #Coolie🔥🤩
Shooting Start From July 😎 pic.twitter.com/cGszeTuzjT— Tharani ᖇᵗк (@iam_Tharani) June 26, 2024
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகவுள்ள கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 26) லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கூலி படத்தின் டெஸ்ட் லுக் என்று குறிப்பிட்டுள்ளார்.
கூலி படத்தில் ரஜினியின் ஸ்டைலை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
ஆனால் இதே லுக்கில் தான் காலா படத்திலும் ரஜினி நடித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு!
ஆயில் என்ற பெயரில் மெத்தனால்: காட்டிக் கொடுத்த ஜிஎஸ்டி நம்பர்! -தொடரும் கள்ளக்குறிச்சி விசாரணை!