‘கூலி’ படத்தின் ஷூட்டிங் காட்சிகள் லீக்: படக்குழு ஷாக்… லோகேஷ் ரெக்வெஸ்ட்!

Published On:

| By Selvam

ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர் மற்றும் கதாபாத்திர பெயர்கள் சமீபத்தில் வெளியானது. ரஜினி தேவா கேரக்டரில் நடிக்கிறார். அதேபோல செளபின் சாஹிர் – தயாள், நாகர்ஜூனா – சைமன், சுருதிஹாசன்  – பிரீத்தி, சத்யராஜ் – ராஜசேகர்  கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஓணம் பண்டிகை அன்று கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்தநிலையில், கூலி படப்பிடிப்பின் போது நாகர்ஜூனா நடித்த சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாகர்ஜூனா ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்தபடி, ஃபைட் செய்யும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஒரு வீடியோ லீக் ஆனதால், பலரின் இரண்டு மாத உழைப்பு வீணாகியது. இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று ஒவ்வொருவரிடமும் நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் திரையனுபவத்தை முற்றிலுமாக ஸ்பாயில் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். கூலி படத்தின் லீக் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘கோட்’… 13 நாட்களில் இத்தனை கோடியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share