CWC 5: என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்!

Published On:

| By Manjula

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி வருகின்ற மே மாதம் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. கடந்த நான்கு சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக செப் தாமு மற்றும் நடிகரும், சமையற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்துள்ளனர்.

இதில் குக் மற்றும் கோமாளிகளாக யார் வரவிருக்கிறார்கள்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையில் தொகுப்பாளர் பிரியங்கா, பிக்பாஸ் புகழ் தினேஷ் மற்றும் பூர்ணிமா, நடிகை அம்பிகா, நடிகர் விடிவி கணேஷ், யூடியூபர் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தொகுப்பாளினி திவ்யா துரைசாமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

இந்தநிலையில் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொள்வாரா? என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்டிருந்தார். அதற்கு வனிதா ”ஜோவிகா தற்போது பிஸியாக உள்ளார். தேதிகள் இல்லை. ஆனால் என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்”, என பதில் அளித்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”அப்போ இந்தமுறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் இல்லம் நோக்கி பேரணி… ஆம் ஆத்மி கட்சியினருக்கு அனுமதி மறுப்பு!

Gold Rate: இதுக்கு கொறையாமலே இருந்துருக்கலாம்

லவ்வர் பாய் விஜய் ஆண்டனி.. ரோமியோ டிரைலர் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel