‘குக் வித் கோமாளி’ ஆரம்ப தேதி வெளியானது… செம குஷியில் ரசிகர்கள்…!

Published On:

| By Manjula

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என, மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் குக் வித் கோமாளி சீசன் 2 தான். இந்த சீசனில் இருந்து தான் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர். இந்த சீசன் கடந்த ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டும்.

ஆனால் இந்நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியதால் தற்போது தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதோடு நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தார்.

தற்பொழுது எல்லாவற்றையும் சரி செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருக்கின்றனர். புதிய நிறுவனம் நடத்துவதால், பல புதிய மாறுதல்கள் நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, நடிகை வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் வசந்த், வெளிநாட்டு சமையல் கலைஞர் கிருஷ்ண மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் விடிவி கணேஷ் போன்றோர் பங்கு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்க இருக்கிறது. சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. எது எப்படியோ இனி வாரயிறுதிகளில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமைச்சர் மகன் கார் உடைப்பால் பதற்றம்…பாமகவினர் மீது புகார்!

ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் – நடிகர் விஜய் ஆண்டனி காட்டம்..!!

பொன் ஒன்று கண்டேன்: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel