விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் குக் வித் கோமாளி சீசன் 2 தான். இந்த சீசனில் இருந்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்தனர்.
இந்த சீசன் கடந்த ஜனவரி மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் என்ற நிறுவனம் திடீரென விலகியது. எனவே தான் இந்த 5-வது சீசன் தாமதமாகத் தொடங்கி இருக்கிறது.
அதோடு நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தற்பொழுது எல்லாவற்றையும் சரி செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருக்கின்றனர்.
புதிய நிறுவனம் நடத்துவதால், பல மாறுதல்கள் நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த சீசனில் புதிதாக ஐந்து கோமாளிகள் அறிமுகம் ஆகின்றனர்.
பழைய சீசன்களில் இருந்து புகழ், குரேஷி, சுனிதா போன்றவர்கள் புரோமோவில் தோன்றினார்கள். இந்நிலையில் ஐந்து பேர் இந்த கோமாளிகள் லிஸ்டில் சேர்ந்துள்ளனர்.
அதாவது விஜய் டிவி பிரபலங்கள் ராமர், நாஞ்சில் விஜயன், வினோத், மற்றும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, தெய்வமகள் சீரியலில் நடித்த நடிகை ஷபி ஷப்னம் ஆகியோர் இணைந்துள்ளனர்.
எனவே குக் வித் கோமாளியின் இந்த புதிய காம்போ எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை, நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது அணை” : டி.கே சிவகுமார் உறுதி!
IPL 2024: முக்கிய வீரர் விலகல்… மாற்று வீரரை எடுத்தது சென்னை
நடிகர் அஜித் மகளா இது?.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!