விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சி பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டராக திகழ்கிறது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த ‘மீடியா மேசன்ஸ்’ என்ற நிறுவனம் அதிலிருந்து விலகியது. மேலும் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் இந்த நிகழ்ச்சி துவங்குவது சற்றே தாமதமானது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் மூலம் இந்த நிகழ்ச்சியில் செப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக, புகழ் பெற்ற சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் பங்கு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் இந்த வருடம் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு நடுவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது.
அதன்படி பிரபல இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் வசந்த், வெளிநாட்டு சமையல் கலைஞர் கிருஷ்ண மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி, நடிகர் விடிவி கணேஷ் போன்றோர் பங்கு கொள்ளப்போவதாக தெரிகிறது.
எனினும் இது எந்த அளவில் உண்மை என்பது தெரியவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் ஜோவிகாவா இது?.. முதல் படத்திலேயே மெரட்டி இருக்காங்க..!
EID 2024: ரம்ஜான் ஸ்பெஷலாக இத்தனை படங்கள் வெளியாகிறதா?
Thalapathy 69: டிவிவி நிறுவனம் அவுட்… முட்டி மோதும் 3 நிறுவனங்கள்?