காதலியை மணந்த குக் வித் கோமாளி புகழ்

சினிமா

குக் வித் கோமாளி புகழ் தனது காதலி பென்சியாவை இன்று (செப்டம்பர் 1) திருமணம் செய்தார். மணமக்களை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

cook with comali pugazh

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.

இவர் தனக்கான நகைச்சுவை பாணி மூலம், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தனது வீடியோக்களை புகழ் வெளியிடுவார்.

இதனால், புகழுக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே போனது. அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் அமைந்தன.

அவர் MR.Zoo Keeper என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில், குக் வித் கோமாளி புகழுக்கு இன்று (செப்டம்பர் 1) விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

புகழ் தான் ஐந்து வருடமாக காதலித்து வந்த பென்சியா என்ற பெண்ணை கரம் பிடித்தார்.

மணமக்களை இயக்குனரும், நடிகருமான சசிகுமார், மதுரை முத்து உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள்  நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

புகழ் திருமணத்தை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் திருமணம் நடைபெற்ற பொய்யாமொழி விநாயகர் கோவிலில் குவிந்து மணமக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.  

செல்வம்

‘குக் வித் கோமாளி’ டூ ‘பிக்பாஸ்’ போட்டியாளர்கள் யார் யார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.