“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் தான் புகழ் – பென்ஸி தம்பதியினரின் வளைகாப்பு நிகழ்வு சினிமா பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி புகழ் – பென்ஸி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தி குறித்து “இரு முறைத் தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையைப் பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்!” என புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் புகழ்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் பலரும் புகழ் – பென்ஸி தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திக் ராஜா
INDvsAUS: ஆறுதல் வெற்றியை அபாரமாக பெற்ற ஆஸ்திரேலியா!