விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு மற்றும் தனது இயல்பான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
காமெடியன் புகழுடன் சேர்ந்து அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படியாக இருந்தன . குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே அவர் அவர் ‘ஓ காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்பு நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவால் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. புல்லட் பைக்கின் பின்னால் ஒருவரை அமர வைத்தபடி அவர் வண்டி ஓட்டும் வீடியோ தான் அது.
https://twitter.com/mazhil11/status/1779102716805210297
”பைக் ஓட்டத் தெரியாத எனக்கு மூன்றே நாட்களில் பைக் ஓட்ட கற்றுக் கொடுத்ததற்கு நன்றி” என்று வீடியோவில் அவர் தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரியாதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் இதற்கு நடிகை பவித்ரா லட்சுமி இதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,”நான் ஹெல்மெட் அணிந்து தான் இருந்தேன். இந்த வீடியோவிற்காக தான் ஹெல்மெட்டை கழட்டினேன். பத்து நிமிடம் தான் வண்டி ஓட்டினேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்” : செல்லூர் ராஜூ விமர்சனம்!
சிம்புவிற்கான கதையில் நடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்?… வைரலாகும் புதிய சர்ச்சை!