மன்னிப்பு கேட்கும் நயன் : கனெக்ட் அப்டேட்!

சினிமா

நயன்தாராவின் பிறந்தநாள் அன்று ‘கனெக்ட்’ படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டாலும் பொதுவெளியில் கணவன் மனைவியாக திருமணம் நடைபெற்றது இந்த வருடம்தான்.

திருமண சடங்கு முடிந்த நான்கே மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றதாக அறிவித்தனர்.

வாடகைத்தாய் பிரச்சினை பொதுவெளியில் விவாத பொருளாக மாறிய போது எதற்கும் பதில் கூறாமல் மெளனம் சாதித்தனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி.

அரசின் விசாரணையில் ஏற்கனவே தாங்கள் 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்ட ஆவணத்தை சமர்பித்தபோது பொது சமூகம் அதிர்ந்து போனது.

குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட பின்னர் நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை

இந்நிலையில் மலையாளத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட கோல்டு படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாததால் வெளியாகவில்லை.

Connect movie Teaser releases on Nayantharas birthday

தற்போது டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று நயன்தாராவின் 38ஆவது பிறந்தநாள் நவம்பர் 18 அன்று அவர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் டீசர் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது .

இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ்,  அனுபம் கேர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

அஷ்வின் சரவணன் இந்த படத்தை திரில்லர் ஜானரில் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடிகை நயன்தாரா ‘மாயா’ படத்தில் நடித்துள்ளார்

இரண்டாவது முறையாக அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி, வெளியாகும் என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள போஸ்டரில், நயன்தாரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போல் உள்ளது.

இராமானுஜம்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவ பிரிவில் பணி!

இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம் : இன்போசிஸ் தலைவர்!

உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் : ஜி 20 மாநாட்டில் மோடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *