குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (62) புற்றுநோய் காரணமாக இன்று (ஏப்ரல் 2) காலமானார்.
அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.
தற்போது நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உயிரிழந்து இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் காமெடி, குணச்சித்திர வேடங்களில் சுமார் 35௦-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சூர்யா, விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவின் அப்பாவாக நடித்திருப்பார். படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 2022 முதல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு சிறுசேரியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
அவரது உடல் நாளை (ஏப்ரல் 3) தகனம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறுசேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜான்வி காதலுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டிய போனி கபூர் … மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு : அமீரிடம் ஆறு மணி நேரமாக விசாரணை!
யாருக்கு ஆதரவு? விஜய் பெயரில் பரவும் போலி கடிதம்!