சின்னத்திரை நடிகை சங்கீதாவை கரம் பிடித்து, இல்லற வாழ்க்கைக்குள் நடிகர் ரெடின் கிங்ஸ்லி அடியெடுத்து வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மூலம் பிரபலமடைந்தவர் ரெடின் கிங்ஸ்லி. முன்னதாக கோலமாவு கோகிலா, கூர்கா, எல்கேஜி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் டாக்டர் படம் தான் அவருக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.
Happy married life @kingsely_redin . Wishing blockbuster life ahead . And this is for real not from any film sets . pic.twitter.com/P9dMgU2RSr
— Sathish krishnan (@dancersatz) December 10, 2023
தொடர்ந்து அண்ணாத்த, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, பத்து தல, மார்க் ஆண்டனி, டிடி ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கான்சூரிங் கண்ணப்பன் படத்திலும் ரெடின் நடித்திருக்கிறார்,
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 10) சின்னத்திரை நடிகை சங்கீதாவை எளிமையான முறையில் ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ்… விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த அதிகாரிகள்!
’தளபதி 68’: 10 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா?
இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்… மைதானம் யாருக்கு சாதகம்?