என் நினைப்பே சுந்தருக்கு இல்லை : குஷ்பூ

சினிமா

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’.

சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி,விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 7ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 27) பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு சுந்தர் பேசுகையில், “நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க, எனது கணவர் சுந்தர்.சி.தான் காரணம்.

ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன். அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.

இந்தப் படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள்கூட என்னை “படப்பிடிப்பிற்கு வா” என சுந்தர்.சி அழைத்ததே இல்லை.

சுத்தமா பொண்டாட்டியை மறந்திட்டாரு. என்னுடைய கல்யாண நாள் வருதேன்னு நினைச்சு நானாத்தான் அவருக்கு போன் செய்து நான் கண்டிப்பா ஊட்டி வர்றேன்.. மூணு நாள் தங்கப் போறேன்னு சொல்லிட்டுத்தான் ஊட்டிக்கு வந்தேன்.

இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்தப் படத்தில் நான் நடித்த ‘ரம்பம்பம்’ பாடலை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதில் நடிக்க என்னை அழைக்கவில்லை” என்றார் குஷ்பூ

இதையடுத்து மேடைக்கு வந்த சுந்தர்.சி. “அவங்க அந்தப் பாட்டுக்கு ஆடுனதை ஏற்கனவே எல்லாரும் பார்த்துட்டாங்க. அதனால்தான் வேணாம்ன்னு நினைச்சேன்.

இப்போ என்ன.. மறுபடியும் அவங்களை ஆட வைச்சு மீடியாவைத் தவிர மத்தவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..” என்று கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்

மேலும் அவர், “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘

உள்ளத்தை அள்ளித் தா’ படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மாதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின்னர் கதை வேறுவிதமாக மாறிவிட்டது.

coffee with kadhal sundar c kushboo speech

அதேபோல்தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல் குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்.

ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை இந்த ‘காபி வித் காதல்’ படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயகர்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ யாரென்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.

coffee with kadhal sundar c kushboo speech

அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர்போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

அம்ரிதாவை பொருத்தவரை நம்மைவிட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக் கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்.

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ரொமாண்டிக் படத்தில் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும்.

coffee with kadhal sundar c kushboo speech

அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மாதான். டேமேஜ் ஹீரோயின் என்றுகூட சொல்லலாம்.

அவர் ஒரு நாள் இருந்தாலும்கூட அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டிடி.

இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் நான் யோசிக்கவில்லை. காலில் அடிபட்டு இருந்த நிலையிலும்கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

இராமானுஜம்

ஆதார் விமர்சனம்!

அமைச்சர் யோகிபாபு அண்ணன் தற்கொலை : காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *