கோப்ரா படத்தில் காட்சிகள் குறைப்பு!

சினிமா

கோப்ரா திரைப்படம் மிகவும் நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, இர்பான் பதான் உள்ளிட்டோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

cobra movie production team

படம் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. குறிப்பாக, படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம், 3 நிமிடம், 3 நொடி நீளமுள்ள படமாக இருந்தது. படத்தின் நீளத்தை 30 நிமிடங்கள் குறைத்தால் படம் சுவாரசியமாக இருக்கும் என்றும் திரையரங்கு மின்சார கட்டணம், புராஜக்டரில் பல்பு எரியும் நேரம் குறைக்கப்படும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

cobra movie production team

இந்தநிலையில், கோப்ரா திரைப்படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கோப்ரா திரைப்பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எந்தவொரு திரைப்படமும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்கும், திரையரங்கு அனுபவத்தை அவர்கள் பெறுவதற்காகவும் உருவாக்கப்படுபவை.

படம் நன்றாக இருந்தால், ரசிகர்களின் நேரத்தையும் டிக்கெட் பணத்திற்கும் தகுதியாக இருந்தால் படக்குழுவினருக்கு அது மகிழ்ச்சி அளிக்கும்.

கோப்ரா திரைப்படத்தைப் பார்த்தவர்கள், ரசிகர்கள், பத்திரிகை நண்பர்கள், விநியோகஸ்தர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க கோப்ரா திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 1) மாலை முதல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் குறைக்கப்பட்ட படக்காட்சிகள் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

காதலியை மணந்த குக் வித் கோமாளி புகழ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *