வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்திக்கு ‘கோப்ரா’ ரிலீஸ் என முடிவாகிவிட்டதால், ‘விக்ரம்’ கமல் பாணியில் ஊர் ஊராகச் சென்று புரமோஷன் பண்ணி வருகிறார் ‘கோப்ரா’வின் ஹீரோ சீயான் விக்ரம்.
இந்தப் படமும் கொரோனாவிற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு ரஷ்யாவில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது.
அதன் பின் இந்தியாவின் முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடந்து பாதிப் படம் முடிந்துவிட்ட நிலையில் லாக்டவுனால் லாக் ஆனது ‘கோப்ரா’.
நிலைமை சகஜமாகி மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்த போது தயாரிப்பாளர் லலித்திற்கும் டைரக்டர் அஜய்ஞானமுத்துவிற்கும் இடையே லடாய் ஆனது.
எல்லாப் பஞ்சாயத்துக்களையும் சுமுகமாகத் தீர்த்து வைத்து லலித்திற்கும், அஜய்க்கும் இடையே சமாதானக் கொடியைப் பறக்கவிட்டு ஷூட்டிங்கையும் நல்லபடியாக முடிக்கப் பாடுபட்டவர் சீயான் விக்ரம்.
இதனால் வெரி ஹேப்பியான லலித், ‘கோப்ரா’வை ரெட்ஜெயண்டிடம் நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.
ஆனாலும் டைரக்டர் அஜய் ஞானமுத்துவுக்கு என்ன மனச்சங்கடமோ, திருச்சி, மதுரை நகரங்களில் நடந்த ‘கோப்ரா’வின் புரமோவில் கலந்து கொள்ளவில்லை.
சினிமாவுக்காகவே வாழ்வேன் : கலங்க வைத்த விக்ரம்!