’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் கிளிக்ஸ்!
ஒபலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ’பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இதில் சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாச்சலம், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 18 ) பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா, நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:
மு.வா.ஜெகதீஸ் குமார்
100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் தமிழ் வெப் சீரிஸ்கள்!
’பத்து தல’ ரசிகர்கள் வெள்ளத்தில் சிம்பு