சர்வதேச சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள். இந்த ஆண்டு 96-வது ஆஸ்கர் விருதிற்கான போட்டியில் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை குறித்து பேசிய இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ’ஓப்பன்ஹைமர்’ படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து ’புவர் திங்ஸ்’ படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. ’கில்லர்ஸ் ஆப்தி ஃபுளோர் மூன்’ படம் 10 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. ’பார்பி’ படம் 8 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.
ஓப்பன்ஹைமர், பார்பி, கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், புவர் திங்ஸ், மாஸ்ட்ரோ, பாஸ்ட் லிவ்ஸ், தி சோன் ஆப் இன்ட்ரெஸ்ட், அமெரிக்கன் ஃபிக்ஷன், தி ஹோல்ட் ஓவர், அனாடமி ஆப் ஃபால் ஆகியவை சிறந்த படத்திற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகர்’ ஆவணப்படம் தேர்வாகி இருக்கிறது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
கமலின் ‘Thug Life’ ஷூட்டிங் ஆரம்பம்: வீடியோ வெளியிட்ட படக்குழு!
சுப்மன் கில் டூ ரவி சாஸ்திரி.. பிசிசிஐ 2024 விருதுகளை வென்றவர்கள் யார்?