பாலியல் புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரைப்படம் மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு இந்திய சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அவரது குரூப்பில் இருந்த நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. ஜனசேனா கட்சியில் இருந்து ஜானியை கட்சித் தலைவர் நீக்கியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் அமைப்பு ஜானி மீதான பாலியல் புகார் சம்பந்தமாக விசாரணையை தொடங்கியுள்ளது.
தற்போது 21 வயதாகும் பெண் 2019ம் ஆண்டிலிருந்தே நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அந்த சங்க நிர்வாக குழுவிற்கு தெலுங்கு பிலிம் சேம்பர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம்.
அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர் செயலாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜானி மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் கோவாவில் இருந்த அவரை தெலுங்கானா போலீசார் இன்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இவர் காவாலா, ரஞ்சிதமே உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபல யூடியூபர் டேன்மே பட் எடை குறைத்தது எப்படி? ஆச்சரியத் தகவல்கள்!
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… தா.மோ.அன்பரசன் சொன்ன முக்கிய தகவல்!
மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் : எடப்பாடி