chiyaan vikram's thangalaan teaser

‘தங்கலான்’ டீசர்: ரத்தமாக தெறிக்கும் தங்கம்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ள படம் தங்கலான். கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

chiyaan vikram's thangalaan teaser

இந்நிலையில் இன்று ( நவம்பர் 1) தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விக்ரமின் கெட்டப், விக்ரம் அசால்ட்டாக பாம்பை இரு துண்டாக பிரித்து எறியும் காட்சி, போர் காட்சிகள், மாளவிகாவின் மாயாஜால சக்திகள், விக்ரமுக்கு ரத்த அபிஷேகம், இறுதியாக தங்க மணல் மேல் ரத்தம் சொட்டும் வாள் உடன் விக்ரம் நிற்கும் காட்சி என பிரமிக்க வைக்கிறது தங்கலான் படத்தின் டீசர்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

காங்கிரஸில் இணைகிறார் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி!

லியோ “UNCUT VERSION” ரிலீஸ்!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts