சிரஞ்சீவி – ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இத்துடன் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ எனப் பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்துக்கு,
‘வால்டேர் வீரய்யா’ எனப் பெயரிடப்பட்டு அதற்கான டீசரையும் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது.
இதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், ‘வால்டேர் வீரய்யா’வை கேலி செய்கிறார். பிறகு சிரஞ்சீவி அந்தக் கப்பலுக்குள் வந்து பழி எடுக்கிறார்.
சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த டீசர் மூலம் சிரஞ்சீவி மீண்டும் பழைய உற்சாகத்திற்கு வந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் டீசரில் அவரது தோற்றம், நடை உடல் மொழி, கதாபாத்திர படைப்பு ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது.
சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் ரவி தேஜாவை டீசரில் காண முடியாவிட்டாலும் , படத்தின் வெளியீட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.
‘வால்டேர் வீரய்யா’ அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்துதயாரிக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இவர்களுடன் ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார்.
இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர்.
‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டிலுக்கான டீசர், வெளியான இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
இன்று சூரிய கிரகணம்: எங்கு, எப்போது, எப்படிப் பார்ப்பது?
கோவை பயங்கரம் : ஐந்து பேர் கைது!