அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஹனுமான் என்னை அழைத்ததாக உணருகிறேன் என்று நடிகர் சிரஞ்சீவி இன்று (ஜனவரி 22) தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 7,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்டோர் இன்று காலை அயோத்திக்கு வருகை தந்தனர்.
அப்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது பற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிரஞ்சீவி அளித்த பேட்டியில், “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனை ஒரு அரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஹனுமான் என்னை அழைத்ததாக உணருகிறேன். பிரதான் பிரதிஷ்டையை காணும் பாக்கியத்தை நாங்கள் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராம் சரண், “இது ஒரு நீண்ட காத்திருப்பு. நாங்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க வந்திருப்பதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமர் கோவில் திறப்பு: விழாக்கோலம் பூண்ட அயோத்தி
சபரிமலை: நடப்பாண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?