சிரஞ்சீவியை காப்பாற்றிய காட்ஃபாதர்

சினிமா

சிரஞ்சீவியின் காட்பாதர் படம் வெளியாகி நான்கு நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிபர் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பு ‘காட்ஃபாதர்‘ என்ற தலைப்பில் வெளியானது. இதில் நடிகர் சிரஞ்சீவி , கெளரவ வேடத்தில்  சல்மான்கான், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

அக்டோபர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியான காட்ஃபாதர் வணிகரீதியாக திரையரங்குகளில் வசூலை குவித்து வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறது

வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வசூல் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

2022 ஏப்ரல் மாதம் 140 கோடி ரூபாய் செலவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. அதில் இருந்து சிரஞ்சீவி மீண்டு வருவாரா என பேசப்பட்டு வந்த நிலையில் காட்ஃபாதர் படத்தின் வெற்றி சிரஞ்சீவி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இராமானுஜம்

ஃபிலிம்பேரில் விருதுகளை அள்ளிய சூர்யா படங்கள்!

இந்திய சினிமாவின் ‘பாகுபலி’ ராஜமௌலியின் கதை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.